அஜித்துடன் இணையும் சிம்பு

அஜித்துடன் இணையும் சிம்பு

அஜித்துடன் இணையும் சிம்பு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2013 | 5:20 pm

கௌதம் மேனன், சிம்பு, பல்லவி நடிப்பில் புதிய படத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார். ‘சட்டென்று மாறுது வானிலை’ என்று முதலில் பெயர் வைக்கப்பட்டது.

இப்போது அந்த தலைப்பு இல்லை. ஏற்கனவே ரவிராஜ் என்பவர் அதே தலைப்பில் படம் இயக்கி முடித்து ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதனால் வேறு தலைப்பை வைக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறார் இயக்குநர் கௌதம்.

இதற்கிடையில், பெப்ரவரியில் தொடங்க இருக்கும் புதிய படம் குறித்து அஜித்திடம் பேச கௌதம் சென்றிருக்கிறார்.

‘சிம்புவும் இந்தப் படத்தில் நடிக்கட்டுமே’ என்று அஜித்தே முன்வந்து கேட்டதோடு, உடனே சிம்புவுக்கும் அழைத்து பேசியுள்ளனர்.

சிம்பு, அஜித்துடன் நடிக்க உடனே ஒப்புகொண்டுள்ளார். இப்போது சிம்புவுக்கான பாத்திரத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார் கௌதம்.

சிம்பு தல பேசிய உற்சாகத்தில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் . ஆர்யா, விதார்த்தைத் தொடர்ந்து இப்போது சிம்புவும் அஜித் படத்தில் நடிக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்