தலைவர் அச்சுறுத்தல் விடுத்ததாக வத்ததளை பிரதேச சபை உப தலைவர் முறைப்பாடு

தலைவர் அச்சுறுத்தல் விடுத்ததாக வத்ததளை பிரதேச சபை உப தலைவர் முறைப்பாடு

தலைவர் அச்சுறுத்தல் விடுத்ததாக வத்ததளை பிரதேச சபை உப தலைவர் முறைப்பாடு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2013 | 11:22 am

வத்தளை பிரதேச சபைத் தலைவர் தொலைபேசி மூலம் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக அந்த பிரதேச சபையின் உப தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதேச சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் அண்மையில் தோல்வியுற்றதை அடுத்து, சபையின் தலைவர் தியாகரத்ன அல்விஸ் தனக்கு இந்த அச்சுறுத்தலை விடுத்திருப்பதாக உப தலைவரான லெஷான் சஞ்ஜீவ குறிப்பிடுகின்றார்.

எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக வத்தளை பிரதேச சபைத் தலைவர் தியாகரத்ன அல்விஸ் கூறியுள்ளார்.

தனிப்பட்ட இலாபத்திற்காக உப தலைவர் தன்மீதான போலிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுதொடர்பில் வத்தளை பிரதேச சபையின் உப தலைவர் முறைப்பாடு செய்துள்ளதாக பமுனுகம பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்