வெயாங்கொடையில் பஸ் விபத்து; 37 பேர் காயம்

வெயாங்கொடையில் பஸ் விபத்து; 37 பேர் காயம்

வெயாங்கொடையில் பஸ் விபத்து; 37 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 2:54 pm

வெயாங்கொடை – தல்கஸ்மொட்டே பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் 2 மதகுருமார்களும் அடங்குகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், தனியார் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்