போலி அட்டோர்ணி பத்திரம் தயாரித்த சட்டத்தரணி கைது

போலி அட்டோர்ணி பத்திரம் தயாரித்த சட்டத்தரணி கைது

போலி அட்டோர்ணி பத்திரம் தயாரித்த சட்டத்தரணி கைது

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 2:08 pm

வீடு மற்றும் காணி ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக போலி அட்டோர்ணி பத்திரம் தயாரித்த சட்டத்தரணி ஒருவர் மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை மடபாத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றையும், காணி ஒன்றையும் விற்பனை செய்வதற்காக சந்தேகநபர் போலி அட்டோர்ணி பத்திரம் தயாரித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

போலி அட்டோர்ணி பத்திரம் தயாரிப்பதற்காக சந்தேகநபரான சட்டத்தரணி 15,000 ரூபாவை அறவிட்டுள்ளார்.

அண்மையில் பெண்ணொருவர், அவரின் இரண்டாவது கணவரால் அந்த வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபரான இரண்டாம் கணவரால் 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகைக்கு அந்த காணி விற்பனை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்