வெளிநாடு சென்றுள்ள விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை – உயர்கல்வி அமைச்சு

வெளிநாடு சென்றுள்ள விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை – உயர்கல்வி அமைச்சு

வெளிநாடு சென்றுள்ள விரிவுரையாளர்கள் நாடு திரும்பவில்லை – உயர்கல்வி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 10:22 am

மேலதிக கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று வெளிநாடு சென்றுள்ள சுமார் 500 விரிவுரையாளர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என உயர்கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிவித்தல் விடுக்கப்பட்டதை அடுத்து, சுமார் 20 பேர் நாடு திரும்பியுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை நாடு திரும்பாத விரிவுரையாளர்கள் பெற்றுக்கொண்ட பணத்திலிருந்து கட்டம் கட்டமாக மீள அறவிடப்பட்டுள்ளது என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு திரும்பியுள்ள விரிவுரையாளர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழகங்களில் பதவிகளை வழங்குவதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர்களுக்கு பதவிகளை வழங்கும்போது, ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் இருக்கின்ற விரிவுரையாளர்களுக்கு அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்