படகு கவிழ்ந்ததில் அனர்த்தத்திற்கு உள்ளான மீனவர்கள் மீட்பு

படகு கவிழ்ந்ததில் அனர்த்தத்திற்கு உள்ளான மீனவர்கள் மீட்பு

படகு கவிழ்ந்ததில் அனர்த்தத்திற்கு உள்ளான மீனவர்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 12:40 pm

காங்கேசன்துறை கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் அனர்த்தத்திற்கு உள்ளான 3 மீனவர்கள் கடற்படையினரால் காப்பற்றப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தில் சிக்கி காயமடைந்திருந்த மீனவர்களுக்கு முதலுதவிகள் வழங்ப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர், மொன்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

அதன்பின்னர், காப்பற்றப்பட்ட 3 மீனவர்களும் பொலிஸாரிடம் ஓப்படைக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடல் கொந்தளிப்பாக இருந்ததன் காரணமாக, இந்த மீனவர்கள் பயணித்த படகு அனர்த்தத்திற்கு உள்ளானமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, காலி தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக யாழ்ப்பாணம் வரையான கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும், அபாயகாரமானதாகவும் மாறக்கூடிய சாத்தியம் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்