சிறந்த கல்விக் கொள்கையொன்று இல்லை – விஜேதாச ராஜபக்ஸ

சிறந்த கல்விக் கொள்கையொன்று இல்லை – விஜேதாச ராஜபக்ஸ

சிறந்த கல்விக் கொள்கையொன்று இல்லை – விஜேதாச ராஜபக்ஸ

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 2:21 pm

கல்வி, உயர்கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய அமைச்சுகளுக்கான வரவு-செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெறுகின்றது.

இன்று விவாதத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம், கல்வித் துறை மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இதனையடுத்து இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க, சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கருத்துகளை தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு என சட்ட பீடம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா வலியுறுத்தினார்.

கல்விக்காக 125 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அது சந்​தேகத்திற்குரிய விடயமாகும் என்பதுடன் சிறந்த கல்விக் கொள்கையொன்று காணப்படவில்லை என்றும் இதன்போது ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்