தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க உப ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க உப ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க உப ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2013 | 12:14 pm

அமெரிக்க உப ஜனாதிபதிக்கும் தென் கொரிய ஜனாதிபதிக்கு இடையில் விசேட சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

ஆசிய நாடுகளுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க உப ஜனாதிபதி ஜோ பைடன் தென் கொரிய தலைவர் பார்க் ஜென் ஹையை சந்தித்துள்ளார்.

சீனா வான் பாதுகாப்பு வலயம் தொடர்பில் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த விஜயம் முக்கியம் பெறுகின்றது.

சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் குறித்த சில தீவுகளுக்கு உரிமை கோரிவருகின்ற நிலையில் அடிக்கடி பதற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.

அமெரிக்காவும் சீனாவும் ஆசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்