வவுனியா சிறுவர் துஸ்பிரயோக வழக்கு; தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா சிறுவர் துஸ்பிரயோக வழக்கு; தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா சிறுவர் துஸ்பிரயோக வழக்கு; தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 6:29 pm

சிறுவர் துஷ்பிரயோக குற்றசாட்டில் பேரில் கைது செய்யப்பட்ட வுவுனியா, அட்டம்பஸ்கட சிறுவர் இல்லத்தின் பொறுப்பாளரான தேரரும் மற்றுமொரு சந்தேகநபரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களான தேரரும் சிறுவர் இல்லத்தின் காவலாளியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 17 அம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது தடவையாகவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க வவுனியா மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய விநாயகமூர்தி இராக்கமலன் மறுத்துள்ளார்.

குறித்து சந்தேகநபர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்படுகள் தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் பூரணப்படுத்தப்படதா நிலையில் அவர்களுக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்