வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவது அவசியம் – வட மாகாண முதலமைச்சர்

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவது அவசியம் – வட மாகாண முதலமைச்சர்

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவது அவசியம் – வட மாகாண முதலமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 8:02 am

மக்களின் நல்வாழ்வுக்காக வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறுவது அவசியமென வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிடுகின்றார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இதனைக் கூறினார்.

இரணுவத்தினர்  கூறுவது பற்றி கவலையில்லை எனக் குறிப்பிட்ட வட மாகாண முதலமைச்சர், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒருவர் தன்னுடைய அதிகாரத்தன் கீழ் இருக்கும் இடத்தைப் பார்வையிடச் செல்லும் போது அதனை இராணுவம் தடுப்பது எந்தளவுக்கு ஜனநாயக முறையாக அமையும் என்பதை அரசாங்கம் சிந்தித்து பார்க்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கையை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

[quote]இராணுவத்தை தயவு செய்து வடமாகாணத்திலிருந்து வெளியேறுங்கள் என்று நாங்கள் கூறிவருகின்றோம், தொடர்ந்தும் கூறி வருவோம். மக்களினுடைய பாதுகாப்பின் நிமித்தம் அவர்களுடைய நல்வாழ்க்கையின் நிமித்தம் அவர்கள் வெளியேறுவது அத்தியவசியம். [/quote] எனவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்