யுத்தக் குற்றங்களுக்கும் பஷார் அல் அசாத்திற்கும் தொடர்புள்ளது – நவனீதம்பிள்ளை

யுத்தக் குற்றங்களுக்கும் பஷார் அல் அசாத்திற்கும் தொடர்புள்ளது – நவனீதம்பிள்ளை

யுத்தக் குற்றங்களுக்கும் பஷார் அல் அசாத்திற்கும் தொடர்புள்ளது – நவனீதம்பிள்ளை

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 12:48 pm

சிரியாவில் இடம்பெற்ற உயர்மட்ட யுத்தக் குற்றங்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத்திற்கும் தொடர்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

விசாரணையொன்றின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் பிரகாரம் யுத்தக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர்களில் ஜனாதிபதியும் உள்ளடங்கியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் முதல் முறையாக பஷார் அல் அசாத் மீது இவ்வாறு நேரடியாக குற்றஞ்சாட்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விசாரணையின் ஊடாக யுத்தக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை தமது அலுவகம் பட்டியலிட்டுள்ளதாக நவனீதம்பிள்ளை கூறியுள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் அதிகமாக தொடரும் முரண்பாடுகளில் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

மிகவும் கொடூரமான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபினமானத்திற்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் பாரிய அளவான ஆதாரங்களைச் ஐ.நாவின் விசாரணை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக நவனீதம்பிள்ளை கூறியுள்ளார்.

கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மனித உரிமை மீறல்களை இரண்டு தரப்பும் மேற்கொண்டுள்ளதாகவும் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குற்றங்களுக்கு நாட்டின் தலைவர் உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் என்பதை ஆதாரங்கள்  வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியக் கிளர்ச்சியாளர்களும் மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்