பொலிஸாரை இலக்குவைத்து ஆர்ப்பாட்டங்களைத் தொடர அழைப்பு

பொலிஸாரை இலக்குவைத்து ஆர்ப்பாட்டங்களைத் தொடர அழைப்பு

பொலிஸாரை இலக்குவைத்து ஆர்ப்பாட்டங்களைத் தொடர அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 12:56 pm

பொலிஸாரை இலக்குவைத்து ஆர்ப்பாட்டங்களைத் தொடருமாறு  தாய்லாந்து அரசாங்கத்திற்கு எதிரான அமைப்பின் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பாங்கொக்கிலுள்ள பொலிஸ் தலைமையகத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறும் ஆர்பாட்டகாரர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்ட வேளையில், மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை பதவி விலக வேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினவாத்ரா நிராகரித்துள்ளார்

பகிரங்க பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவுள்ளதாக யிங்லக் சினவத்ரா தெரிவித்த போதிலும், அரசாங்கத்திற்கு பதிலாக சபையொன்றை ஸ்தாபிப்பது சட்டவிரோதமானது எனவும், அரசியலமைப்புக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்