படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி

படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி

படகு கவிழ்ந்ததில் மீனவர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 4:09 pm

திருகோணமலை வீரநகர் கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் உயிழந்துள்ளார்.

இன்று காலை 4.30 அளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

குறித்த படகில் பயணித்த மேலும் இரண்டு மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்