ஜோ ரூட் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கலாம் – கிரஹம் கூச்

ஜோ ரூட் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கலாம் – கிரஹம் கூச்

ஜோ ரூட் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கலாம் – கிரஹம் கூச்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 12:53 pm

குளிர்கால ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் ஜோ ரூட் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கலாம் என இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் கூச் சமிஞ்யை தெரிவித்துள்ளார்.

முதலாவது போட்டியில் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய ஜொனதன் ட்ரொட் நாடு திரும்பியுள்ள நிலையில், ஜோ ரூட்டிற்கு இந்தச் சந்தர்ப்பம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபாதையில் இருந்து மீண்டுள்ள ரிம் பிரஸ்னன் ஜொனதன் ட்ரொட்டிற்கு பதிலாக இங்கிலாந்து குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை ஹரி பலன்ஸ், பென் ஸ்டொக்ஸ் அல்லது ஜொனி பேயார்ஸ்டோ ஆகியோரில் ஒருவருக்கு இரண்டாவது போட்டியில் சந்தர்ப்பம் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி நாளை மறுதினம் அடிலைட்டில் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்