சர்வதேச மாற்றுத் திறனுடையோர் தினம் இன்று

சர்வதேச மாற்றுத் திறனுடையோர் தினம் இன்று

சர்வதேச மாற்றுத் திறனுடையோர் தினம் இன்று

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 10:48 am

சர்வதேச மாற்றுத் திறனுடையோர் தினம் இன்றாகும்.

“உட்படுத்துகை சமூகத்திற்காக தடைகளை உடைத்து, அனைவரும் அபிவிருத்தி காணுவோம்” என்பதே இம்முறை தொனிப்பொருளாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளுக்கு அமைய, உலகெங்கிலும் ஒரு பில்லியன் மாற்றுத் திறனுடையோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது

மாற்றுத் திறனுடையோருக்கு உள்ள அனைத்து தடைகளும் தகர்த்தப்பட்டு, அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கான கதவு திறக்கப்பட வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச மாற்றுத் திறனுடையோர் தினத்தை முன்னிட்டு, நிகழ்வொன்று சபாநாயகர் சமல் ராஜபக்ஸ தலைமையில் இன்று மஹியங்கனையில் இடம்பெறவுள்ளதுடன், தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 06 ஆம் திகதி வெல்லவாய பகுதியில் நடைபெறவுள்ளது.

நாட்டில் மாற்றுத் திறனுடையோருக்காக பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்