காலாவதியான பொருட்கள் கொழும்பில் கண்டுபிடிப்பு

காலாவதியான பொருட்கள் கொழும்பில் கண்டுபிடிப்பு

காலாவதியான பொருட்கள் கொழும்பில் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 5:27 pm

நுகர்வுக்கு பொருத்தமற்ற 8000 கிலோகிராம் பயறு மற்றும் உளுந்து ஆகியன கொழும்பு கிராண்பாஸ் பகுதியிலுள்ள உற்பத்தி நிலையமொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையத்தில் பாசிப்பயிறு உலர்ந்தப்பட்டு, பயிற்றம் பருப்பாக வர்த்தக சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை குறிப்பிட்டது.

அங்கிருந்த 5000 கிலோகிராம் பயறும், 3000 கிலோகிராம் உளுந்தும் கண்டெடுக்கப்பட்டதுடன், அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரூமி மர்சூக் குறிப்பிட்டார்.

பண்டிகை காலத்தில் பொருட்கொள்வனவில் போது, காலவதி திகதி தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மோசடிகள் ஏதேனும் இடம்பெற்றால், அது தொடர்பில் 077 10 588 922 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவிக்க முடியும்மென ரூமி மர்சூக் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்