ஐ.நாவின் விசேட பிரதிநிதி – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு

ஐ.நாவின் விசேட பிரதிநிதி – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு

ஐ.நாவின் விசேட பிரதிநிதி – வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 1:50 pm

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உள்ளக இடப்பெயர்வுக்குள்ளானவர்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி, வட மாகாண முதலமைச்சர், ஆளுனர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோரை இன்று சந்தித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுடனான சந்திப்பு  முதலமைச்சர் இல்லத்தில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை தொடர்பில் கண்டறிவதற்காக ஐ.நாவின் விசேட பிரதிநிதியும், அறிக்கையாளருமான சொலோக்கா பெயானி இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது, இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் தகவல்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பெயானி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்