எதிர்க்கட்சி தலைவருக்கு கட்டிடம் மற்றும் வாகனம் வழங்கியுள்ளோம் – பிரதமர்

எதிர்க்கட்சி தலைவருக்கு கட்டிடம் மற்றும் வாகனம் வழங்கியுள்ளோம் – பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 9:04 pm

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு எதிர் கட்சியொன்று அவசியமென்பதால் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்தின நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்த கருத்து :-

“எதிர்க்கட்சி தலைவருக்கு சிறந்த கட்டிடம் மற்றும் வாகனம் என்பன இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கியுள்ளோம். எதிர்க்கட்சி சிறந்த முறையில் செயற்பட வேண்டும் என்பதற்காகவே இவை வழங்கப்பட்டுள்ளது.ஜனநாயகத்தை பாதுகாக்க எதிர்க்கட்சி தேவையாகும். எதிர்க்கட்சியின் தலைமைத்துவம் அவசியமென்பதால் ஜனாதிபதி இந்த திட்டத்தை தயாரிக்கும் போது நான் இதனை முன் வைத்த இரண்டு விடயங்களும் தற்போது சிறந்த முறையில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன”

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து :-

“வழங்கியதை இட்டு நான் பிரதமருக்கு நன்றி கூறுகின்றேன். ஆனால் எதிர்க்கட்சி ஒன்று செயற்பட கட்டிடமோ, வாகனமோ போதுமானதல்ல. முழுமையான ஜனநாயக சூழல் காணப்படவேண்டும்.”

பிரதமர் டி.எம்.ஜயரத்தின தெரிவித்த கருத்து :-

“இதனூடாக எந்தளவுக்கு சிறந்த வகையில் ஜனநாயகத்தை ஜனாதிபதியும் எமது அரசாங்கமும் செயற்படுத்துகின்றது என்பது தெளிவடைகிறது. இவ்வாறான ஒரு நிலைமை இதற்கு முன்னர் வழங்கப்பட்டதா? என்பதை இதன்போது கேட்க விரும்புகின்றேன். அவர் அமைச்சரவைக்கு வேண்டுகோள் விடுத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி அதனை அங்கீகரித்து, அமைச்சரவை ஊடாக நியாயமான முறையில் வழங்கி தனது செயற்பாடுகளை சிறந்த வகையில் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்தார். இதனூடாக எமது ஜனநாயகம் தெளிவாகின்றது.”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்