உக்ரேன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

உக்ரேன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

உக்ரேன் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

எழுத்தாளர் Staff Writer

03 Dec, 2013 | 9:55 pm

உக்ரேன் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க் கட்சிகளால் கொண்டுவரப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான போதிய  ஆதரவு    எதிர்க் கட்சிகளுக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் உக்ரேன் பாராளுமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான  உடன்படிக்கையை உக்ரேன் அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளன.

உக்ரேனில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்