ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 2:46 pm

கல்கிஸ்சை படோவிட்ட இரண்டாம் பிரிவு மாரிபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்திலுள்ள உண்டியல் நேற்றிரவு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ளது.

இன்று காலை கோயில் நிர்வாகத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆலய சொத்துக்கள் சூறையாடப்படுகின்றமை பாபச் செயலாகும் என  கல்கிசை மாரிபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ  நாகேஷ்வர ஐயர் ஷண்முகரத்தின குருக்கள் சுட்டிக்காட்டுகின்றார்.

கோவில்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மாரிபுரம் ஆலயத்தின் நிர்வாகச் சபை செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களாக வடமாகாணம், மலையகம், தென் மாகாணம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளலும் ஆலயங்கள் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

தெனியாய, பள்ளேகம ரத்நாயக்க தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயமும், யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியிலுள்ள காளி கோவிலும் நேற்று முன்தினம் இரவு சேதமாக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள்  திருடப்பட்டிருந்தன.

இரத்தினபுரி – கொலன்ன – ஹேயஸ் தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம்,  தெனியாய  பச்சைமரம் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம் மற்றும் அணில்கந்தை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்களிலும் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய கடந்த ஆறு நாட்களுக்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆறு கோயில்களில் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பாக நியூஸ் பெர்ஸ்டுக்கு தகவல் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கோயில்களில் இடம்பெற்றுவரும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச இந்து மத குருமார் ஒன்றியமும், அகில இலங்கை இந்து மாமன்றமும் கோரிக்கை விடுத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்