திருகோணமலையில் நாளை நீர் வெட்டு

திருகோணமலையில் நாளை நீர் வெட்டு

திருகோணமலையில் நாளை நீர் வெட்டு

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 2:27 pm

திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை ஆறு மணி தொடக்கம் 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

திருகோணமலை பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளமையே நீர் விநியோகத் தடைக்கு காரணம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

தம்பலகாமம், திருகோணமலை பட்டிணமும் சூழலும், கிண்ணியா, குச்சவெளி, கந்தளாய் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் நாளை காலை ஆறு மணி தொடக்கம் மறுநாள் புதன்கிழமை காலை ஆறு மணி வரை நீர் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்