English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Dec, 2013 | 3:39 pm
தாய்லாந்தில் பொதுப் பணிப்பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் பாங்கொக்கிலுள்ள கட்டங்களுக்கு வெளியில் போடப்பட்டிருந்த தடைகளை தகர்க்க முற்பட்ட ஆர்பாட்டகாரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகைபிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
9 ஆவது நாளாகவும் அரச எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தலைநகரிலுள்ள பாடசாலைகள் மற்றும் சில பல்கலைகழங்கள் மூடப்பட்டுள்ளன.
நேற்று பிரதமர் அலுவகத்தை முற்றுகையிட முற்பட்ட ஆர்பாட்டகாரர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
2010 ஆம் ஆண்டின் பின்னர் தாய்லாந்தில் ஏற்பட்டுள்ள மோசமான அரசியல் அமைதியின்மை காரணமாக இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
யிங்லக் சினவாத்ரா பதவி விலக வேண்டுமென வலியுறுத்திவரும் ஆர்பாட்டகாரர்கள், மக்களின் ஆட்சி மாற்றத்துக்கான நாள் என நேற்றைய தினத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தனர்.
அரசாங்க ஆதரவுடன் பாராளுமன்றத்தில் அரசியல் மன்னிப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
07 Dec, 2019 | 04:10 PM
03 Dec, 2019 | 03:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS