சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடிய பிரஜை கைது

சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடிய பிரஜை கைது

சீனாவிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனடிய பிரஜை கைது

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 3:23 pm

சீனாவிற்கென  உளவு பார்த்த குற்றச்சாட்டில் கனேடிய பிரஜையொருவர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின்  யுத்தக் கப்பல் கொள்வனவு தந்திரோபாயங்கள் தொடர்பாக தகவல்களை சீனாவிற்கு  விற்பதற்கு குறித்த சந்தேகநபர் முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனது.

கப்பல் உருவாக்கத்துடன் தொடர்புடைய நிறுவனமொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ள 53 வயதான குவாங் என்ற நபர் பணியாற்றிவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்ராரியோவைச் சேர்ந்த குவாங்கின் செயற்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து டொரன்டோவில் வைத்து அவர் கனேடிய பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்படும் பட்சத்தில் அவருக்கு  ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்