கொழும்பில் அரை நிர்வாணப் போராட்டம்

கொழும்பில் அரை நிர்வாணப் போராட்டம்

கொழும்பில் அரை நிர்வாணப் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 12:36 pm

விவசாய அமைப்புக்கள் சில கொழும்பில் இன்று அரை நிர்வாணப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் விவாசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த விவசாயிகள் கோவனம் அணித்து கொழும்பில் ஒன்றுகூடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இன்று பிற்பகல் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகளின் அரைநிர்வாணப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக  அகில இலங்கை கமநல சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

விவசாய ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை கண்டித்தும் மற்றும் நிலுவைக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கோரி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

விவசாயிகளின் உரிமைகளை மட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை கமநல சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக கோவனத்துடன் கூடும் விவசாயிகள் மக்களை தெளிவுபடுத்துவதற்கான துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்க உள்ளதாக சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை, இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் விவசாயிகளுக்கான பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி  சபாநாயகர்  சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

விவசாய உற்பத்திக்கான  முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஒத்துக்கீடுகள் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மானிய உரத் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்