ஆர்.ஐ.ரி அலசின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

ஆர்.ஐ.ரி அலசின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

ஆர்.ஐ.ரி அலசின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 7:22 pm

பிரபல கல்வியாளரான காலஞ்சென்ற ஆர்.ஐ.ரி.அலசின் பூதவுடல் இன்றும் சொற்பநேரத்தில் அக்கினியுடன் சங்கமமாகியது.

அன்னாரது இறுதிக் கிரியைகள் தற்போது பொரளை மயானத்தில் நடைபெற்றது.

தமது 81 ஆவது வயதில் இயற்கை எய்திய ஆர்.ஐ.ரி. அலஸின் பூதவுடலுக்கு இன்று மாலை வரை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தினர்.

பொரளை டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரிக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அன்னாரது பூதவுடலுக்கு, பாடசாலையின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இறுதிஅஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ராஜகிரிய கொஸ்வத்தை வீதியில் அமைந்துள்ள கேட்வே சர்வதேச பாடசாலைக்கு அன்னாரது பூதவுடல் கொண்டுசெல்லப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்