அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வில்லை – சுஜீவ சேனசிங்க

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வில்லை – சுஜீவ சேனசிங்க

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2013 | 11:32 am

அரச ஊழியர்களுக்கு 1200 ரூபா சம்பள உயர்வு இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் வழங்கப்பட வில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கடுவெல பகுதியில் நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றிலயே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களின் சந்திப்பொன்று நேற்று கடுவெல போமிரிய பிரதேசத்தில் இடம்பெற்றது.

ரஸ்ஸபான நலன்புரி சங்கத்திற்கு இதன்போது பொருட்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஐக்கிய  தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்த கருத்து :-

“இன்று  நாட்டில் வருமானம் ஈட்டும் தனியார் நிறுவனங்கள் 20 வீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளன.இந்த வருடத்தில் 1200 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.கொடுப்பனவாகவே வழங்ப்பட்டுள்ளது.அதனை வேண்டிய நேரத்தில் விலக்கிக் கொள்ளமுடியும்.இன்று கருவாடு,சீனி பால்மா,உள்ளிட்ட அனைத்து பொருட்களினதும் விலைகளும் அதிகரிக்கப்ட்டுள்ளன. ஆனால் கெசினோவிற்கு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்