மாணவர்களுக்கான அடையாள அட்டையை விநியோக்க விசேட சேவை

மாணவர்களுக்கான அடையாள அட்டையை விநியோக்க விசேட சேவை

மாணவர்களுக்கான அடையாள அட்டையை விநியோக்க விசேட சேவை

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 11:01 am

சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 7ஆம்  திகதி விசேட ஒருநாள் சேவையின்கீழ் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு ஆட்பதிவு திணைக்களம் உத்தேசித்துள்ளது.

எவ்வாறாயினும் குறித்த தினத்தன்று அடையாள அட்டைகளை பெறுவதற்காக மாணவர்கள் திணைக்களத்திற்கு வரவேண்டியதில்லை என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ்.சரத் குமார தெரிவித்துள்ளார்.

இதற்கமைய உரிய ஆவணங்களுடன் பெற்றோர்களில் ஒருவர் ஆட்பதிவு திணைக்களத்திற்கு வருகைதந்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் சார்பில் ஆசிரியர்களும் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்