ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 2:23 pm

தெனியாய பள்ளேகம ரத்நாயக்க தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

நேற்றிரவு இடம்பெற்ற   இந்த சம்பவத்தின்போது  அம்பாளின் மூன்று தாளிகள், பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தெனியாய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற கோயிலுக்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக   நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்கள்  சேதப்படுத்தப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்