நிர்க்கதிக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது – கடற்படை

நிர்க்கதிக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது – கடற்படை

நிர்க்கதிக்குள்ளான மீனவர்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது – கடற்படை

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 7:44 pm

சீரற்ற வானிலை காரணமாக இந்து சமுத்திரத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாக கூறப்படும் இலங்கை மீனவர்கள் தொடர்பில் சென்னையிலுள்ள சர்வதேச சமுத்திர பாதுகாப்பு நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக கடற்படை குறிப்பிடுகின்றது.

அனர்த்தத்திற்குள்ளான படகில் 08 மீனவர்கள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து 450 கடல்மைல் தொலைவிலுள்ள இந்து சமுத்திர கடற்பரப்பில் அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளதாக கடற்படை பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளான 05 மீனவர்கள் காப்பாற்றப்பட்டு, மற்றுமொரு படகில் தற்போது கரைக்கு அழைத்துவரப்படுவதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்