நான்கு விக்கெட்டுகளால் வெற்றி தென்னாபிரிக்கா வசம்

நான்கு விக்கெட்டுகளால் வெற்றி தென்னாபிரிக்கா வசம்

நான்கு விக்கெட்டுகளால் வெற்றி தென்னாபிரிக்கா வசம்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 1:29 pm

பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றுள்ளது.

எனினும் இந்த தொடரை 2 – 1 என்ற ஆட்டக்கணக்கில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்சூரியனில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46 தசம் 5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழக்காமல் 79 ஓட்டங்களைப் பெற்றதுடன், உமர் அமீன் மற்றும் சொஹைய்ப் மசூத் ஆகியோர் தலா 25 ஓட்டங்களைக் குவித்தனர்.

வேலன் பிலெண்டர் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், லொன்வாபோ சொற்சொபே, ரெயால் மெக்லரின் மற்றும் இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

180 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 38 தசம் 4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
அணித் தலைவர் ஏ பி டி வில்லியஸ் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதுடன், ஹசீம் அம்லா 41 ஓட்டங்களைக் குவித்தார்.

சயீட் அஜ்மால் இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன், சொஹைய்ல் தன்வீர், பிலவால் பஹட்டி மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக வேனல் பிலெண்டரும் தொடரின் சிறப்பாட்டகாரராக சயீட் அஜ்மாலும் தெரிவுசெய்யப்பட்டனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்