கோப்பாய் திருட்டு சம்பவத்தின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கோப்பாய் திருட்டு சம்பவத்தின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கோப்பாய் திருட்டு சம்பவத்தின் சந்தேகநபருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 6:01 pm

கோப்பாய் மத்தியில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ். நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை இன்று ஆஜர்படுத்தியபோது,  எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கோப்பாய் மத்தியிலுள்ள வீடொன்று நேற்று முன்தினம் இரவு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்றிரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் சுமார் 35 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்