குரேஷியாவில் ஓரினத் திருணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

குரேஷியாவில் ஓரினத் திருணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

குரேஷியாவில் ஓரினத் திருணத்தை தடை செய்ய வாக்கெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 1:16 pm

குரேஷியாவில் ஒரீனத் திருமணத்தை தடைசெய்வது தொடர்பான  சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பில் அந்த நாட்டு மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

குரேஷியாவின் அரசியலமைப்பில் ஆண் பெண் மாத்திரமே ஒன்றிணைய முடியும் என்ற திருமணம் தொடர்பான வரைவிலக்கணத்தில் மாற்றங்களை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து இதன் மூலம் தீர்மானிக்கப்படவுள்ளது.

இந்த வாக்கெடுப்புக்கு எதிரப்பு தெரிவித்து ஒரீனச் சேர்க்கைக்கு ஆதரவான நூற்றுக்கணக்கானவர்கள் தலைநகரின் ஊடாக பேரணியாக சென்றிருந்தனர்.

கத்தோலிக்க குழுக்களால் வரையப்பட்ட வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்கும் பிரேரணையில் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கையொப்பமிட்டிருந்தனர்.

ஒரீன திருமணத்திற்கு எதிராக 68 வீதமானவர்களும் எதிராக 27 வீதமானவர்களும் வாக்களிப்பார்கள் என கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்திருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்