கஞ்சா கடத்திய பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கைது

கஞ்சா கடத்திய பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கைது

கஞ்சா கடத்திய பொலிஸ், இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 8:43 pm

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறப்படும் மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர், அம்பாறை, பொத்துவில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் உத்தியோகத்தரின் பயணப் பொதியை சோதனைக்குட்படுத்திய போது, மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைத்திருந்த இரண்டரை கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அவர் மொனராகலையில் இருந்து அம்பாறைக்கு கஞ்சா போதைப்பொருளை கொண்டுசென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஒரு கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இராணுவ உறுப்பினர் பேலியகொடை மோசடி ஒழிப்பு பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெல்லவாயவில் இருந்து கொழும்பிற்கு போதைப்பொருளை விற்பனை செய்வதற்கு கொண்டுவந்த சந்தர்ப்பத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்