உப்புவெளியில் வாகன விபத்து; ஒருவர் பலி

உப்புவெளியில் வாகன விபத்து; ஒருவர் பலி

உப்புவெளியில் வாகன விபத்து; ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 8:57 pm

திருகோணமலை உப்புவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உப்புவெளி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய மின்சார சபை கட்டடத்திற்கு அண்மையில் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்துள்ள நபரால் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வீதியில் புரண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அவர், திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.

சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் மற்றும் நீதவான் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்