உக்ரைன் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கண்டனம்

உக்ரைன் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கண்டனம்

உக்ரைன் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 11:37 am

உக்ரைனில் மேற்கொள்ளப்படும் எதிர்கட்சிகளின் பாரிய ஆர்பாட்டங்களால் கடும் சீற்றமடைந்துள்ளதை ஏற்படுத்தியுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி விக்டர் யானூகோவிச் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஆர்பாட்டகாரர்களின் முகாம்களை முற்றுகையிட்டமை தொடர்பில் வருத்தமடைவதாக  கீவ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

இதனைடுத்து நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டதுடன், இன்றைய தினம் பாரிய ஆர்பாட்டங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான கூட்டு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடுவதை நிராகரித்துள்ளமைக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதுடன்,  நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்