இமான் இசையில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி

இமான் இசையில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி

இமான் இசையில் பாடிய வைக்கம் விஜயலட்சுமி

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2013 | 5:07 pm

“என்னமோ ஏதோ” படத்திற்காக டி.இமான் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடலொன்றை பாடியுள்ளார்.

ஐந்து பாடல்கள் இடம் பெரும் இப்படத்தில் டி.இமான் இசையில் கார்க்கி பாடல் வரிகளில் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலும், சுருதி ஹாசன் ஒரு பாடலையும் பாடியுள்ளனர்.

மெல்லிய காதல் கதையான இப்படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் வைக்கம் விஜயலட்சுமி ஒரு பாடலை பாடியுள்ளார். கொச்சின் பாலரிவட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ள ஃபிரடி என்ற ஸ்டுடியோவில் பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.”செல்லுலாயிட்” என்ற மலையாள படத்தில் “காற்றே காற்றே நீ” என்ற பாடலை பாடி அனைவரையும் கவனிக்க வைத்தவர். கண் பார்வை அற்றவரான விஜயலட்சுமி வீணை மீட்டுவதிலும் வல்லவர். மலையாள நாட்டின் பொக்கிஷம் என்று இவரது ரசிகர்கள் இவரை போற்றுவது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்