பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; இருவருக்கு காயம்

பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; இருவருக்கு காயம்

பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; இருவருக்கு காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 2:30 pm

களனி பல்கலைக்கழகத்தின் 2 மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட கைக்கலப்பில் 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார வைபவமொன்றின்போது இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களனி பல்கலைக்கழக கலைப் பீடத்திலேயே மாணவர் குழுக்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயங்களுக்குள்ளான மாணவர்களில் ஒருவர் தேசிய வைத்தியசாலையிலும், மற்றைய மாணவர் தனியார் வைத்தியசாலை ஒன்றிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்