பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தீ; பெற்றோல் கசிவே காரணம் – பொலிஸ்

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் தீ; பெற்றோல் கசிவே காரணம் – பொலிஸ்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 8:10 pm

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள கட்டடமொன்றில் தீ பரவியமைக்கு பெற்றோல் கசிவே காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீயினால் ஏற்பட்ட சோதவிபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து இன்று முற்பகல் 11.15 அளவில் இடம்பெற்றுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தீயணைப்பு சேவைப் பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.

புனரமைப்பு நடவடிக்கைகளின் பொருட்டு மாநாட்டு மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தப்பட்ட மண்டபத்திலேயே தீ பரவியிருந்தது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

அண்மையில் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு நடைபெற்றபோது, ஊடக மத்திய நிலையமாக இயங்கிய கட்டடமே தீயினால் சேதமடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்