திறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்ற வேண்டியது கல்வித்துறையின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

திறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்ற வேண்டியது கல்வித்துறையின் பொறுப்பாகும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 8:33 pm

அனைத்து மாணவர்களையும் ஒன்றாகக் கருதி, திறமையற்றவர்களை திறமையானவர்களாக மாற்ற வேண்டியது கல்வித்துறையின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஹொராணையில் அமைந்துள்ள பௌத்த அறநெறி பாடசாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை தெரிவித்தார்

அறநெறி பாடசாலையின் அதிபர் ஓபல்லே ஞானஸ்ரீ தேரருக்கு ஜனாதிபதியினால் சினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு தேரரும் சினைவுச் சின்னமொன்றை கையளித்தார்.

இந்த அறநெறி பாடசாலைக்கு என நிர்மாணிக்கப்பட்ட புதிய இருமாடிக் கட்டிடம் இதன்போது ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்