டொல்பின் இனங்களை பாதுகாப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை

டொல்பின் இனங்களை பாதுகாப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை

டொல்பின் இனங்களை பாதுகாப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கம் நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 5:08 pm

மிகவும் அரிதாகி வரும் டொல்பின் இனத்தை பாதுகாப்பதற்கு நியூஸிலாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மவ்விஸ் எனும் வகையைச் சேர்ந்த டொல்பின்கள் தற்போது நியூஸிலாந்தின் மேற்கு கரை தீவுகளிலேயே காணப்படுவதாகவும் , தற்போது  குறித்த வகையைச் சேர்ந்த 55 டொல்பின்களே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைக்கவுள்ளதாக  நியூஸிலாந்து அரசாங்கம் திர்மானித்துள்ளது.

உரிய நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் இன்னும் 20 வருடங்களில் உலகின் சிறிய மற்றும் அரிதான டொல்பின் வகை முற்றாக அழியும் அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்