டிசம்பர்  25 ஆம் திகதி கோச்சடையான் பாடல்கள்

டிசம்பர் 25 ஆம் திகதி கோச்சடையான் பாடல்கள்

டிசம்பர் 25 ஆம் திகதி கோச்சடையான் பாடல்கள்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 6:31 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள கோச்சடையான் திரைப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் டிசம்பர் 25ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இந்த இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரியவருகின்றது.

முன்னதாக ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் திகதி கோச்சடையான் இசை வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் படத்தின் இறுதிக்கட்டப் பணிக்காக ரஜனியின் மகளும், படத்தின் இயக்குனருமான சவுந்தர்யா வெளிநாடு சென்றிருப்பதால், மேலும் இரண்டு வாரங்களுக்கு இசை வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள கோச்சடையான் பாடல்கள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்