சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு; 11 பேர் கைது

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு; 11 பேர் கைது

சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு; 11 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 10:20 am

கொம்பனித்தெரு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த சூதாட்ட நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த சூதாட்ட நிலையம் நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதன் முகாமையாளர் உட்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முனனெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துளளது.

எச்சரிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்