களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி

களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி

களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்து; இளைஞன் பலி

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 9:58 am

களுவாஞ்சிக்குடி, பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து மாலை 5.40 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டுவிலகி அருகிலிருந்த கம்பம் ஒன்றின்மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பெரியகல்லாறு, உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
குறிப்பிடுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்