உக்ரேன் தலைநகரில் ஆர்பாட்டகாரர்களை கலைப்பதற்கு  பொலிஸார் தாக்குதல்

உக்ரேன் தலைநகரில் ஆர்பாட்டகாரர்களை கலைப்பதற்கு பொலிஸார் தாக்குதல்

உக்ரேன் தலைநகரில் ஆர்பாட்டகாரர்களை கலைப்பதற்கு பொலிஸார் தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 5:40 pm

உக்ரேன் தலைநகரில் அரசாங்கத்திற்கு எதிராக ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது  பொலிஸார்  தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தலைநகரில் உள்ள சுதந்திர வர்த்தக வலயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உடன்படிக்கையில்  கைச்சத்திடுவதற்கு  அந்நாட்டு ஜனாதிபதி மறுப்பு தெரிவித்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்’ முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாகவும் , பலர் காயமடைந்ததாகவும் பி பி சி செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்