இரத்தினப்புரி ஹேயஸ்தோட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

இரத்தினப்புரி ஹேயஸ்தோட்ட ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் திருட்டு

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 1:30 pm

 

இரத்தினபுரி கொலன்ன ஹேயஸ் தோட்டத்திலுள்ள ஆலயமொன்று உடைக்கப்பட்டு தங்காபரணங்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

ஹேயஸ் தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமே நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திருலிருந்து 2 உண்டியல்களும், தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களும் களவாடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்