அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 1500க்கும் அதிகமானோர் கைது

அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 1500க்கும் அதிகமானோர் கைது

அனுமதிச் சீட்டின்றி ரயிலில் பயணித்த 1500க்கும் அதிகமானோர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2013 | 12:45 pm

அனுமதிச் சீட்டின்றி ரயில் பயணம் மேற்கொண்ட 1 560 பேர் வருடத்தின் முதல் 10 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இத்தகையவர்களிடம் இருந்து சுமார் 30 இலட்சத்து நான்காயிரம் ரூபா அபராதமாக அறவிடப்பட்டுள்ளது என ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சேனக ஜயசேன தெரிவித்தார்.

குறிப்பாக அனுமதிச்சீட்டின்றி பயணித்தல், மிதி பலகையில் பயணித்தல், பிச்சை எடுத்தல், ரயில்களில் சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் அபராதம் அறவிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அபராத தொகையை செலுத்த முடியாதவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கையின் பொருட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாகவும் ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்