பேரறிவாளன் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

பேரறிவாளன் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

பேரறிவாளன் மனுமீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 12:12 pm

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தொடர் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என கோரி, இந்த வழக்கின் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரளிவாளன் தாக்கல் செய்திருந்த மனுமீதான தீர்ப்பு டிசம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட போரறிவாளன் வேலுர் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான சதித் திட்டத்தில் ஈடுப்பட்டு இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாத அத்தனை நபர்கள் குறித்தும் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகாமை சரிவர புலன் விசாரணைகளை நடத்தவில்லை என பேரறிவாளன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்ததாக தஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் ரஜீவ் காந்தியுடன் கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்றும் அந்த மணுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முறையான புலன் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிடுவதோடு, அந்த விசாரணையை நீதிமன்றத்தில் கண்காணிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு சென்னையிலுள்ள தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்