புத்தளம் தபால் விநியோகஸ்தர் சேவை இடைநிறுத்தம்

புத்தளம் தபால் விநியோகஸ்தர் சேவை இடைநிறுத்தம்

புத்தளம் தபால் விநியோகஸ்தர் சேவை இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 8:30 am

புத்தளம் கொட்டுக்கச்சி தபால் நிலைய கடித விநியோகஸ்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஒருதொகை கடிதங்கள் காட்டில் வீசப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தபால் விநியோகஸ்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள அதிகாரி ஒருவரினால் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே தபால் விநியோகஸ்தர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்