நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவம்; கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவம்; கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் கொலை சம்பவம்; கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2013 | 8:04 am

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சிகனின் கொலை தொடர்பிலான விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பொலிஸ் குழு கொழும்பில் இருந்து நெடுந்தீவு நோக்கி நேற்று புறப்பட்டுச் சென்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் ரெக்சிகன் சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்