English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Nov, 2013 | 9:11 am
சுகாதார ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த 48 மணித்தியால பணிபகிஷ்கரிப்பு இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
தாதியர், தகுதிகாண் மற்றும் தற்காலிக வைத்திய ஊழியர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தின் 16 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் கோரிக்கைகள் சிலவற்றை முன்நிறுத்தி நேற்று முன்தினம் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர்.
இதன் காரணமாக வைத்தியசாலைகள் பலற்றில் நோயாளர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
தமது தொழிற்சங்க நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது என தாதியர், தகுதிகாண் மற்றும் தற்காலிய வைத்திய ஊழியர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியாக சுமார் 650 வைத்தியசாலைகளிலும், 320 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று காலை ஏழு மணியிலிருந்து சகல சுகாதார ஊழியர்களும் வழமையான பணிகளில் ஈடுபடுமாறு அறிவிக்கப்பட்டிருப்பதாக சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தங்களின் கொடுப்பனவு மற்றும் சம்பள பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
28 Apr, 2022 | 08:07 PM
14 Sep, 2021 | 08:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS